நீட் தேர்வு: தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- IndiaGlitz, [Thursday,May 03 2018]
தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து காளிமுத்து என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், வேறு எந்த மாநில மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு சிபிஎஸ்.இ. வழக்கறிஞர் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே வேறு மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்ரீம் கோர்ட், சிபிஎஸ்.இக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இருப்பினும் தேர்வுதேதி நெருங்கிவிட்டதால் வேறு வழியின்றி இந்த ஆண்டு வேறு மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்படவேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
எனவே இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில்தான் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.