நீட் தேர்வுக்கு எப்படி செல்ல வேண்டும் தெரியுமா? தேசியத்தேர்வு முகமையின் புதிய அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் தாக்குதலுக்கு இடையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் நடைபெற இருக்கிறது. இதற்கான விதிமுறைகள் குறித்து தேசியத்தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் மாணவர்கள் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும், ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி, நீட் தேர்வு அனுமதிச் சீட்டுடன் சுய அறிவிப்புப் படிவம், புகைப்படம் (விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றப்பட்ட அதே படம்), செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டை, 50 மில்லி அளவில் சானிடைசர், உட்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், முகக்கவசம், கையுறை, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லாம்.
மேலும் மாணவர்கள் குறைவான உயரம் கொண்ட காலணிகளை அணியலாம் எனக் கூறப்பட்டு இருக்கிறது. ஷீ உள்ளிட்ட மூடப்பட்ட காலணிகளுக்கு அனுமதி கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது. லேசான அரைக்கை மற்றும் முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி இல்லை. மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்க வழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிந்திருக்கும் தேர்வர்கள் கட்டாயம் சோதனை செய்யப்படுவர், இதற்காக அவர்கள் சீக்கிரமே தேர்வு வரவேண்டியது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்வின்போது குளறுபடிகளைத் தவிர்க்க தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்கு புதிததாக முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கனவே மாணவர்கள் அணிந்திருக்கும் முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு தேர்வு அறையில் அளிக்கப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம் என்றும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் விதிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com