நீட் தேர்வுக்கு எப்படி செல்ல வேண்டும் தெரியுமா? தேசியத்தேர்வு முகமையின் புதிய அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,September 10 2020]

 

கொரோனா பரவல் தாக்குதலுக்கு இடையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் நடைபெற இருக்கிறது. இதற்கான விதிமுறைகள் குறித்து தேசியத்தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் மாணவர்கள் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும், ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நீட் தேர்வு அனுமதிச் சீட்டுடன் சுய அறிவிப்புப் படிவம், புகைப்படம் (விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றப்பட்ட அதே படம்), செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டை, 50 மில்லி அளவில் சானிடைசர், உட்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், முகக்கவசம், கையுறை, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லாம்.

மேலும் மாணவர்கள் குறைவான உயரம் கொண்ட காலணிகளை அணியலாம் எனக் கூறப்பட்டு இருக்கிறது. ஷீ உள்ளிட்ட மூடப்பட்ட காலணிகளுக்கு அனுமதி கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது. லேசான அரைக்கை மற்றும் முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி இல்லை. மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்க வழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிந்திருக்கும் தேர்வர்கள் கட்டாயம் சோதனை செய்யப்படுவர், இதற்காக அவர்கள் சீக்கிரமே தேர்வு வரவேண்டியது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்வின்போது குளறுபடிகளைத் தவிர்க்க தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்கு புதிததாக முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கனவே மாணவர்கள் அணிந்திருக்கும் முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு தேர்வு அறையில் அளிக்கப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம் என்றும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் விதிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

More News

இரண்டாம் பாகமாக உருவாகும் ஷங்கரின் சூப்பர்ஹிட் திரைப்படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இந்த படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

கொரோனா சிகிச்சையில் கலக்கும் நம்ம ஊரு சித்த வைத்தியம்? பரபரப்பு தகவல்!!!

கொரோனா எனும் பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல் எப்போது வெளிவரும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வாங்கிய கடனை கட்ட முடியல… விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாண்டாவில் பிந்தரன் எனும் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் கடன் தொல்லை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

சாலையின் ஒரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம்… திடீரென எழுந்து நடந்து சென்ற சுவாரசியக் காட்சி!!!

உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் சாலை அருகே துணியால் சுற்றப்பட்டு கிடந்த ஒரு சடலத்தை ஒருவர் பார்க்கிறார்.

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்! அதிர்ச்சியில் சின்னத்திரை 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.