இந்தியாவில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடி: இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா???
- IndiaGlitz, [Friday,July 10 2020]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனுக்குத் தப்பிச் சென்ற விவகாரம் இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்த அவரை கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்தின் யார்டு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான செயல்பாடுகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவித்தன.
நாடு கடத்துவது பற்றிய வழக்கு ஒன்று இந்தியாவின் சார்பில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்ட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடரப்பட்ட உடனேயே நீரவ் மோடி ஜாமீன் வழக்கை அடுக்கடுக்காக தொடுத்து வருகிறார். வெஸ்ட்மின்ஸ்ட் நீதிமன்றத்தில் அவர் தொடுத்த ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து கைதிகள் அதிகமாக உள்ள லாண்ட்ஸ் வோர்த் சிறையில் அவர் அடைக்கப் பட்டார். ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் ஒரு வழக்கை அவர் தொடுத்து இருக்கிறார்.
இதனால் 28 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு காவல் துறைக்கு உத்திரவிடப் பட்டுள்ளது. நேற்று வேஸ்ட்மின்ஸட் நீதிமன்றம் ஜாமீன் வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது மேலும் 28 நாட்கள் சிறை கைதை நீடித்து உத்திரவிடப்பட்டது. அதனால் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை லண்டன் சிறையில் அவர் வைக்கப்படுவார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நாடு கடத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய் மல்லையா இன்னும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படவில்லை. அதைத்தொடர்ந்து நீரவ் மோடியின் வழக்கும் இழுத்துக் கொண்டே போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.