ஒரே தங்கம்… தரவரிசையில் உச்சம் தொட்ட நீரஜ் சோப்ரா… வியப்பில் ரசிகர்கள்!
- IndiaGlitz, [Thursday,August 12 2021] Sports News
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தற்போது உலகத்தடகள வரிசையில் 14 இடங்கள் முன்னேறி ஒரேயடியாக 2 ஆம் இடத்தை பிடித்து இருக்கிறார். இதனால் உலக அளவில் கவனம் பெற்ற ஒருவராகவும் மாறிவிட்டார்.
இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொணட் நீரஜ் சோப்ரா துனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதோடு உலகச் சாம்பியன் பட்டம்வென்ற வீரர் வாட்டர் கூட தனது முதல் முயற்சியில் 87 மீட்டர் ஈட்டி எறிந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நீரஜ் சோப்ராவின் பெயர் தற்போது உலக அளவில் அறியப்பட்டு வருகிறது.
மேலும் தடகள விளையாட்டில் தனிநபர் பிரிவில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக 2 ஆவது தங்கம் வென்ற வீரரும் இவர்தான். அந்த வகையில் இந்தியர்களின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக துப்பாக்கிச் சுடும்போட்டியில் கலந்து கொண்ட அபினவ் பிந்த்ரா தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
அவருக்குப் பின்பு நீரஜ் இந்தியாவிற்காக தடகளப் பிரிவில் தங்கம்வென்று உலகத் தரவரிசையில் தற்போது 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜெர்மன் வீரரான ஜோஹன்னாஸ் வாட்டர் என்பவர் 1,396 புள்ளிகளுடன் உலகத்தர வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நீரஜ் 14 இடங்கள் முன்னேறி 1,315 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரே ஒரு தங்கத்தால் 14 இடங்கள் முன்னேறி உலகத் தரவரிசையில் 2 ஆம் இடத்தைப் பிடித்திருக்கும் நீரஜ் சோப்ராவை பார்த்து பல முன்னணி வீரர்களும் ஆச்சர்யம் வெளியிட்டு வருகின்றனர். இதைத்தவிர இன்ஸ்டாவில் 1.43 லட்சம் ஃபாலோயர்களை பெற்றிருந்த நீரஜ்க்கு தற்போது 30 லட்சத்தைத் தாண்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.