திரைப்படமாகிறது ஒலிம்பிக் 'தங்கமகன்' வாழ்க்கை வரலாறு!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ்சோப்ரா தங்கம் வென்றார் என்பது தெரிந்ததே. அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் எடுப்பதில் முந்திக் கொள்ளும் பாலிவுட் திரையுலகம், ஏற்கனவே தோனி, சச்சின், மேரிகோம் உள்பட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை தயாரித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தையும் தயாரிப்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் அருண்ரெய் தொடார் என்பவர் நீரஜ் சோப்ராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் உறுதி செய்யப்பட்டால் நீரஜ் சோப்ரா வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

19 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்.....!

காதல் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான கதிர், சுமார் 19 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்க உள்ளார்.

படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம்… இன்ஸ்டாவில் அவரே கொடுத்த விளக்கம்!

பிரபல இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் புதுப்படம் ஒன்றில் நடிகர் அருண்விஜய் நடித்துவருகிறார்.

மாலத்தீவு சென்ற நடிகை ஹன்சிகா … மீண்டும் பிகினி புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவில் பப்ளி நடிகையாக வலம்வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

'சார்பாட்டா பரம்பரை': இயக்குனர் ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும்

5 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த இசையமைப்பாளர்: ஹரி படத்தில் சிறப்பு தோற்றம்!

இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த ஒருவர் ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் ஹரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.