இணையத்தில் வைரலாகும் ஒற்றைச் சொல் எஃப்.டி.ஐ? பிரதமர் அளித்த அதிரடி விளக்கம்!
- IndiaGlitz, [Monday,February 08 2021]
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்தும் கருத்துத் தெரிவித்து இருந்தார். அப்போது தன்னுடைய உரையில் எஃப்.டி.ஐ என்ற சுருக்கச் சொல்லை அவர் பயன்படுத்தி இருந்தார். இந்தச் சொல் சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.
எஃப்.டி.ஐ என்றால் foreign destructive ideology என்று விளக்கம் அளித்த பிரதமர் மோடி வெளிநாட்டுப் பிரபலங்கள் உள்ளிட்ட ஆதரவுகளையும் விமர்சித்து பேசினார். மேலும் இந்த நாட்டில் புதிதாக சிலர் தோன்றி உள்ளனர். இவர்கள்தான் போராட்ட ஜீவிகள். இன்று புதிய அயல்நாட்டு சிதைவு கருத்தியல் உருவாகியுள்ளது. நாட்டுக்கு இந்தக் கருத்தியலை அறியச் செய்ய வேண்டியுள்ளது.
நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராகத்தான் இருக்கிறோம். இந்த அவையில் இந்த அழைப்பை நான் விடுக்கிறேன். நாட்டில் உள்ள சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டியதுதான் இந்த நேரத்துக்கு அவசியமானதாகும். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். வாருங்கள் ஒன்றாக அமர்ந்து பேசலாம்.
நாங்கள் பேச்சு வார்தைக்கு தயாராக்கத்தான் உள்ளோம். இந்த அவையில் இருந்து உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். குறைந்த பட்ச ஆதார விலை தொடரும். யாரும் தவறான தகவல்களை பரப்ப முடியாது. நாம் முன்னோக்கி நகர வேண்டும், பின்னோக்கி செல்லக் கூடாது. இந்த சீர்த்திருத்தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும எனக் கூறிய பிரதமர், போராட்டம் நடத்தி வருபவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.