மத்திய அரசை எதிர்க்கும் வலிமையான தலைவர் வேண்டும்: அரவிந்தசாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டமான சம்பவம் காரணமாக தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய, மாநில அரசு மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என்று குற்றஞ்சாட்டாமல், அரசியல் ஆதாயம் தேடாமல் இனிமேலாவது ஒரு உயிர் கூட இழக்காவண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோலிவுட் திரையுலகினர் உள்பட பலர் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் அரவிந்தசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: தமிழகத்தின் தேவையை முழுவதும் தெரிந்து கொண்டவரும், மத்திய அரசை எதிர்த்து தைரியமாக போராடக்கூடியவருமான ஒரு தலைவர் தற்போது தேவை' என்று கூறியுள்ளார்.
மேலும் திராவிட கழகங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்ற அர்த்தம் தரும் #DontVoteDravidianParties என்ற ஹேஷ்டேக்கையும் அரவிந்தசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுமே மெத்தனமாக இருந்துவிட்டன என்பதுதான் மிகப்பெரிய துரதிஷ்டம்.
Need a leader who has strong knowledge of TN & who can make bold voice towards the Central. #DontVoteDravidianParties #NEETkilledAnitha
— Aravind Samy (@Arvindsamy5) September 1, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com