ஒரே நாளில் சுமார் 8000 பேர்: இந்தியாவில் 1.73 லட்சமாக உயர்ந்து கொரோனா பாதிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரை தினமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்கள் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 8000 பேர் வரை கொரோனாவினால் பாதிப்பு அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா தொற்று 1.73 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது இந்தியாவில் 1,73,763 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு நேற்று 1,65,799 என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் 7964 பேர்கள் கொரோனாவுக்கு பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706லிருந்து 4,971 ஆக அதிகரித்துள்ளதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106 லிருந்து 82,370 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உலக அளவில் 60,33,754 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 366,890 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனாவால் 1,793,530 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேசிலில் கொரோனாவால் 468,338 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் கொரோனாவால் 387,623 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் கொரோனாவால் 285,644 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் 271,222 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவால் 232,248 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் கொரோனாவால் 186,835 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout