மீண்டும் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 3986 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 911,110 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3986 பேர்களில் 1459 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1500ஐ நெருங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 17 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12,821 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 1,824 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 870,546 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 79,927 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 198,45,778 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் டிஜிபி கலந்து கொண்டிருப்பதாகவும் நாளை புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது