300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,August 02 2021]


ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கும் அங்குள்ள தாலிபான் அமைப்புகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் “கந்தகார்“ எனும் முக்கிய நகரத்தில் நடைபெற்ற சண்டையில் 300க்கும் மேற்பட்ட தாலிபான்கள் அரசு இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட தாலிபான்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாலிபான்கள் யார்?

தாலிபான்கள் என்றால் “பஷ்தே“ மொழியில் மாணவர்கள் என்றுதான் பொருள். முல்லா ஓமர் தலைமையில் கடந்த 90 வாக்கில் 50 மதராஸா மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்த தாலிபான் அமைப்பு. முதலில் அரசு ஆதிக்கத்தில் இருந்து மக்களை காக்கும் அமைப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது.

சோவியத் ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் தஞ்சம் புகுந்தவர்களை காப்பாற்றும் அமைப்பாக கருதப்பட்ட இந்த அமைப்பு நாளடைவில் அல்-கொய்தா மற்றும் ஒசாமா பின் லேடன், அல்-ஜவாஹிரியும் போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்குத் துணைபோனது. இதனால் உலகில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு இந்த தாலிபான் அமைப்பும் முக்கியக் காரணமாக செயல்பட்டது.

Us-நேட்டா படை

தாலிபான் அமைப்பினர் கடந்த 2001 வாக்கில் அமெரிக்காவில் உள்ள 4 விமானங்களை திருடி நியூயார்க்கில் இருந்த முக்கிய வணிகவர்த்தக் கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அமெரிக்க அரசு தாலிபான்களின் அட்டூழியத்தை ஒழிப்பதற்காக அவர்கள் அடைக்களம் புகுந்திருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை குறி வைக்கத் துவங்கியது.

இதற்காக “நேட்டா“ எனப்படும் தனிச்சிறப்பு படை உருவாக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் தாலிபான்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்த அமைப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தது.

2021 ஒப்பந்தம்

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தாலிபான்கள் அமைப்பிற்கும் அமெரிக்கா அரசிற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க சிறப்பு படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இதற்குப் பதிலாக தாலிபான்கள் இனிமேல் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புக்கு துணைபோக மாட்டார்கள். மேலும் தாலிபான்கள் வசம் உள்ள பகுதிகளில் அல்கொய்தா போன்ற பயங்காரவாத அமைப்பினருக்கு தடைவிதிக்கும்.

மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தான் அரசு தனது சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான தாலிபான்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்குப் பதிலாக தாலிபான்கள் தங்கள்வசம் உள்ள அரசு கைதிகளை விடுவிப்பார்கள்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாலிபான்கள் அல்கொய்தா அமைப்பை ஊக்குவிக்க மாட்டார்கள் என்றால் அமெரிக்கா படையை விலக்கிக் கொள்வதில் எந்த சிரமமும் இல்லை எனத் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த ஒப்பந்ததின்படி தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பாலான இராணுவப் படை வீரர்கள் தங்களது சொந்த ஊரான அமெரிக்காவிற்கு சென்றுவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆப்கனில் இருந்து அமெரிக்க இராணுவம் விலகிவிட்டது. இந்நிலையில் ஆப்கன் அதிபரான ஆஷார்ஃப்கான் தன்னுடைய சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான தாலிபான் கைதிகளை விடுவித்து விட்டார். ஆனால் ஆப்கன் அரசுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 300 சிறை கைதிகளை அவர் விடுவிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த மறுப்பை அடுத்து தாலிபான் அமைப்பினர் கடந்த சில தினங்களாக ஆப்கன் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசாங்க வசம் உள்ள பெரும்பாலான மாவட்டங்களைத் தற்போது தங்கள் வசம் பிடித்து வைத்துள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக ஆப்கான் இராணுவத்திற்கும் தாலிபான் அமைப்பினருக்கும் இடையே ஆங்காங்கே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு இடையே பல நூற்றுக்கணக்கான பொது மக்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுவரை 70 மாவட்டங்களை தாலிபான் அமைப்பு பிடித்து வைத்திருக்கிறது என்றும் அதில் 11 மாவட்டத்தை ஆப்கன் அரசு மீண்டும் திருப்பியுள்ளது என்றும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ஆப்கான் இராணுவத்திற்கும் தாலிபான் அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான போரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உயிருக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் லாஸ்லியாவுக்காக சூர்யா செய்யும் உதவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்ட போட்டியாளர்களின் சிலருக்கு தமிழ் திரையுலகிலும் வாய்ப்புகள் பெற்று ஜொலித்து வருகிறார்கள் என்பதும் அந்த வகையில் லாஸ்லியாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ் உள்பட 5 மொழிகளில் ஃபர்ஸ்ட் சிங்கிள்: 'புஷ்பா' படக்குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா' திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே.

எந்தவித அறிவிப்பு இல்லாமல் வெளிவரும் 'வலிமை' ஃபர்ஸ்ட்சிங்கிள்! எப்போது தெரியுமா?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் வெளிவந்த தகவலை

பிரபல நடிகரின் மகன்....! இப்ப நம்ம ஊரு சப் கலெக்டர்.....!

கடந்த 2019-ஆம் ஆண்டு  நடைபெற்று முடிந்த ஐஏஎஸ் தேர்வில், இந்திய அளவில்  75-ஆவது இடம்

நாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

பகத்சிங் தூக்கிலடப்படுவதைப் போன்று ஒத்திகை பார்த்த 10 வயது சிறுவன் உத்திரப்பிரதேச மாநிலத்தில்