'மாஸ்டர்' திரைப்படத்தை ஓடிடியில் பார்த்தது இத்தனை மில்லியன் பேரா? ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த திரைப்படம் இரண்டே வாரங்களில் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியிலும் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும் ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஓடிடியில் மட்டும் ’மாஸ்டர்’ படத்தை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ’மாஸ்டர்’ திரைப்படம் ஒளிபரப்பான முதல் நாளில் 9.2 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வழியாக பார்த்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல் ’மாஸ்டர்’ திரைப்படத்தை மொத்தம் 28 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் கடந்த வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. திரையரங்குகளில் மிகப்பெரிய சாதனை செய்தது போலவே ஓடிடியிலும் இந்த படம் புதிய சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

27 வயதில் 20 கின்னஸ் ரெக்கார்ட்… பாப் இளவரசியின் தடாலடி அசத்தல்!

பாப் இசை உலகில் சமீபகாலமாக கொடிகட்டிப் பறந்து வரும் பாடகி Ariana Grande. அமெரிக்காவை சேர்ந்த இவர் பாடுவதில் மட்டுமல்ல சிறந்த நடிப்புக்காகவும் சிறந்த வடிவமைப்புக்காகவும் பெயர் பெற்றவர்.

சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

பாலாஜி தந்தை மறைவுக்கு ஆரியின் செயல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் பாலாஜியின் தந்தை நேற்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த தகவல் அறிந்த பாலாஜியின் ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

அழகுக்கு நிறம் எதற்கு? அடர்ந்த கறுப்பில் சாதனை படைத்த ஒரு மாடல் அழகி!

அழகு என்றாலே அது வெள்ளைதான் என்ற மனப்பான்மை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பிசிசிஐயின் புது டிரிக்… சென்னை டெஸ்ட் மேட்சில் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது அங்கு நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு சமூக இடைவெளியோடு அனுமதி வழங்கப்பட்டது.