4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பமான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தற்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னையில் 4 மண்டலங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இம்மண்டலத்தில் 1889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தை அடுத்து கோடம்பாக்கத்தில் 1391, பேர்களும், திருவிக நகரில் 1133 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1054 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு மண்டலங்களில் மட்டும் மொத்தம் ஆயிரத்து 5467 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை, ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை, சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை போன்ற மற்ற பகுதிகளில் உள்ள தளர்வுகள் சென்னையில் இல்லை என்றாலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு திகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொதுமக்கள் மிக நெருக்கமான பகுதிகளில் வாழ்வதாலும், சென்னை மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் பலர் மாஸ்க் அணியாமல் இன்னும் சாலைகளில் சென்று கொண்டிருப்பதுமே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

More News

வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்த திரைப்படம் 'ஆடுகளம்'.

பிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு சில தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸை முடிந்த அளவு கட்டுப்படுத்துகிறது.

பங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாக்கிய 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா???

இந்தியாவில் அதிக வரிவருவாயை கொடுக்கும் இரண்டு டஜன் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன???

கொரோனா நோய்த் தொற்றானது பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகளின் மூலம் பரவுகிறது