2 லட்சத்தை நெருங்கிவிட்டது கொரோனா பாதிப்பு: உலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா
- IndiaGlitz, [Tuesday,June 02 2020]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்துவிட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1,98,706 என அறிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95,527 என்றும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 97,581 என்றும் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5598 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 18,59,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 529,405 எனவும், ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414,878 எனவும், ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286,718 எனவும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276,332 எனவும், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233,197 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய ஆறு நாடுகளை அடுத்து இந்தியா 7வது இடத்தில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது