1500ஐ நெருங்கும் ராயபுரம்: இன்றைய சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 668 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள் என்றும் வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி சென்னையில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

இதன்படி சென்னை ராயபுரத்தில் 1423 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் மட்டும் 1500ஐ நெருங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தை அடுத்து கோடம்பாகத்தில் 1137 பேர்களும், திருவிக நகர் பகுதியில் கொரோனா வைரசால் 900 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தேனாம்பேட்டையில் 822 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தண்டையார்பேட்டை பகுதியில் 723 பேர்களும், அண்ணா நகர் பகுதிகளில் 610 பேர்களும், வளசரவாக்கத்தில் 544 பேர்களும், அடையாறில் 413 பேர்களும், அம்பத்தூரில் 330 பேர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவது சென்னை மக்களை அச்சுறுத்தியுள்ளது