14 ஆயிரத்தை நெருங்கும் சென்னை கொரோனா பாதிப்பு: ராயபுரத்தில் எவ்வளவு?

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் இன்று பேருந்து போக்குவரத்து உள்பட பல அறிவிக்கப்பட்ட தளர்வுகள் சென்னைக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 13980 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 2589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 1709 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1557 பேர்களும், தண்டையார்பேடை மண்டலத்தில் 1536 பேர்களும், திருவிக நகர் மண்டலத்தில் 1494 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 1180 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 846 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 773 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 13,980 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணாநகர் ஆகிய ஆறு மண்டலங்களில் மட்டும் 10,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இம்மண்டலங்களில் சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.