இந்தியாவின் அதிக ஊழல் நடக்கும் மாநிலம் எது?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் அதிக ஊழல் நடக்கும் மாநிலம் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணப் பணியகம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் அதிக ஊழல் குற்றங்கள் நடைபெறும் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 1016 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் ஒடிஷா, மூன்றாவது இடத்தில் கேரளா, நான்காவது இடத்தில் மத்திய பிரதேசம் மற்றும் ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளது. அதிக ஊழல் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் தமிழ்நாடு இல்லை என்பது ஒரு ஆறுதல்.
இதேபோல் இந்தியாவில் அதிக கிரிமினல் சம்பவங்கள் நடக்கும் நகரங்கள் பட்டியலில் புனே முதலிடத்தில் உள்ளது. இங்கு 2016ஆம் ஆண்டில் 185 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து நாசிக், நாக்பூர், தானே, அவுரங்காபாத், அமராவதி ஆகிய நகரங்கள் உள்ளது.
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் என்ற பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இங்குதான் இந்தியாவில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் 40% நடப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் டெல்லியை அடுத்து மும்பை மற்றும் பெங்களூரில் அதிகம் நடப்பதாகவும் தேசிய குற்ற ஆவணப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout