பிரபல தயாரிப்பாளர் வீட்டில் போதைப்பொருள் சோதனை… மீண்டும் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பல இந்தி சினிமாக்களை உருவாக்கிய பிரபல தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹைத்ரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலை NCB அதிகாரிகள் நடத்திய சோதனை செய்துள்ளனர். அதில் போதைப்பொருள் விருந்து நடைபெற்றதாகக் கூறி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன், ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலங்களிலும் NCB அதிகாரிகள் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
மும்பை பாந்திரா பகுதியில் உள்ள தயாரிப்பாளர் இம்தியாஸ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து அவருடைய அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கொலை வழக்கிற்குப் பிறகு போதைப்பொருள் விவகாரம் இந்தியா முழுக்கவே பூதாகரமாகி இருக்கிறது.
இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் தற்போது சோதனை நடைபெறுவது குறித்து விஷயம் பூதாகரமாகுமோ? என்ற கேள்விளையை எழுப்பி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com