கேப்டனுக்கும் இந்த நிலைமையா? ரோஹித்துக்கு செக் வைத்த பிசிசிஐ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தசைப்பிடிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்றுவரும் ரோஹித் சர்மாவிடம் உடல்தகுதியை நிரூபித்தால் மட்டும் போதாது உடல்எடையை 5-6 கிலோ வரை குறைத்தாக வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இதனால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிகளில் அவர் ஜொலிப்பார் எனக் கருதப்பட்ட நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரோஹித் விலகிவிட்டார். இதனால் ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரோஹித் சர்மா குறித்துபேசும் ரசிகர்கள் தசைப்பிடிப்புக்கு இவ்வளவு நாட்கள் தேவைப்படுமா? அவர் ஏன் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து பேசியுள்ள மருத்துவர்கள் அவருடைய உடல்எடை காரணமாக கால்களில் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே உடல்எடையை கணிசமாகக் குறைத்தாக வேண்டும் எனத் தெரிவித்து உள்ளனர். இதே அறிவுரையைத் தற்போது பிசிசிஐயும் கூறியிருக்கிறது.
இதற்கு முன்பு 2021 ஐபிஎல் போட்டிகளிலும் ரோஹித் தசைப்பிடிப்பு காரணமாகச் சில போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் போட்டிகளிலும் அவர் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதனால் உடல் எடையைக் குறைத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் ரோஹித் சர்மா உடல்மெலிந்து காணப்படுவது போலவே தோற்றம் அளிக்கிறார். இதனால் இலங்கைக்கு எதிரான தொடர் போட்டிகளில் அவர் கலந்துகொள்வார் என்றும் மீண்டும் தனது ஹிட்மேன் பேட்டிங்கில் அசத்துவார் என்று ரசிகர்கள் ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments