உலகப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்!

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோப் பிரயன்ட் என்பவர் நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஐந்து முறை NBA சாம்பியன் பட்டம் பெற்ற கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் என்பவர் தனக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் தனது 13 வயது மகள் மற்றும் சிலருடன் ஹெலிகாப்டரில் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தார்

அப்போது திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோப் பிரயன்ட் மற்றும் அவரது மகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கோப் பிரயன்ட் மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலகின் பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

கோலிவுட் திரையுலகில் கோப் பிரயன்ட் அவர்களின் தீவிர ரசிகர்களான தனுஷ் மற்றும் அனிருத் உள்பட பலர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கோப் பிரயன்ட் மறைவிற்கு தங்களது அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது