படப்பிடிப்பு தளத்தில் நாசரின் நல்ல முயற்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக சினிமாக்காரர்களுக்கு படப்பிடிப்பு நடத்த இடம் கொடுத்தால் அந்த இடத்தையே அசுத்தமாக்கிவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பலர் படப்பிடிப்பு நடத்த இடம் கொடுக்க அனுமதிப்பதில்லை.
இந்த நிலையில் நடிகர் நாசர் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில் நடிகர் நாசர் படப்பிடிப்பு குழுவினர்களால் ஆங்காங்கே போடப்பட்டிருந்த காலி டீ கப்களை ஒரு பையில் சேகரித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு சென்றார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் நாசரின் இந்த நல்ல முயற்சிக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொருவரும் நாசர் போல் இருந்தால் பிரதமரின் தூய்மை இந்தியா' கனவு நனவாகும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சங்க தலைவர் நாசரின் நல்ல முயற்சி @nasser_kameela @VishalKOfficial @NadigarsangamP #nasser pic.twitter.com/D6Dghsi2CL
— meenakshisundaram (@meenadmr) June 30, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments