சோஷியல் மீடியாவை விட்டு நடிகை நஸ்ரியா விலகல்… காரணம் தெரியாமல் குழம்பிய ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது க்யூட் ரியாக்சன் மூலம் தமிழ், மலையாள ரசிகர்களிடையே வரவேற்புபெற்ற நடிகையாக இருந்துவரும் இளம் நடிகை நஸ்ரியா நஜிம் ஃபஹத் திடீரென்று அனைத்து சோஷியல் மீடியாவில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் தொகுப்பாளினியாகப் பணியாற்றியவர் நஸ்ரியா நஜிம். இவர் கடந்த 2013 இல் வெளியான ‘நேரம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமான இவர் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் முன்னணி நடிகையானார். இந்நிலையில் மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்திவந்த அவர் தேசிய விருதுபெற்ற மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு 2018 இல் ‘கூட’ திரைப்படத்தில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து ‘டிரான்ஸ்‘, ‘மணியரயிலே அசோகன்’ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்தார். அதேபோல ‘அந்தே சுந்தராகிணி‘ திரைப்படம் முலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
சினிமாவைத் தவிர சோஷியல் மீடியாவிலும் பரபரப்பாக இயங்கிவரும் இவர் தற்போது திடீரென அனைத்து சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன் எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் உங்கள் அன்பு மற்றும் செய்திகளை அனைத்தையும் இழக்கிறேன். எனக் கூறியுள்ள நடிகை நஸ்ரியாவின் முடிவு அவரது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக விலகலுக்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout