சோஷியல் மீடியாவை விட்டு நடிகை நஸ்ரியா விலகல்… காரணம் தெரியாமல் குழம்பிய ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

தனது க்யூட் ரியாக்சன் மூலம் தமிழ், மலையாள ரசிகர்களிடையே வரவேற்புபெற்ற நடிகையாக இருந்துவரும் இளம் நடிகை நஸ்ரியா நஜிம் ஃபஹத் திடீரென்று அனைத்து சோஷியல் மீடியாவில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் தொகுப்பாளினியாகப் பணியாற்றியவர் நஸ்ரியா நஜிம். இவர் கடந்த 2013 இல் வெளியான ‘நேரம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமான இவர் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் முன்னணி நடிகையானார். இந்நிலையில் மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்திவந்த அவர் தேசிய விருதுபெற்ற மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு 2018 இல் ‘கூட’ திரைப்படத்தில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து ‘டிரான்ஸ்‘, ‘மணியரயிலே அசோகன்’ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்தார். அதேபோல ‘அந்தே சுந்தராகிணி‘ திரைப்படம் முலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.

சினிமாவைத் தவிர சோஷியல் மீடியாவிலும் பரபரப்பாக இயங்கிவரும் இவர் தற்போது திடீரென அனைத்து சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன் எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் உங்கள் அன்பு மற்றும் செய்திகளை அனைத்தையும் இழக்கிறேன். எனக் கூறியுள்ள நடிகை நஸ்ரியாவின் முடிவு அவரது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக விலகலுக்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

18 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தார்… பிரபல பாடகர் மீது குற்றச்சாட்டிய இளம்பெண்!

பிரபல அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகருமான ஜிம்மி ஆலன் தன்னை 18 மாதமாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தார்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான உச்ச நட்சத்திரங்களின் படங்களை ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. 

'சந்திரமுகி 2' படத்தின் மாஸ் தகவல்.. ரிலீஸ் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' என்ற திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து 'சந்திரமுகி 2' படம் உருவாகி வருகிறது.

'எழுதிடவா இதழ் வழியாய்': விஜய் யேசுதாஸ், சின்மயி குரலில் 'டக்கர்' பாடல்..!

நடிகர் சித்தார்த் நடித்து வரும் படங்களில் ஒன்று 'டக்கர்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய் பிறந்த நாளில் செய்ய வேண்டியதை நேற்றே செய்த ரசிகர்கள்: பொதுமக்கள் பாராட்டு..!

ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்த தினமான ஜூன் 22ஆம் தேதி செய்யும் செயலை நேற்றே ரசிகர்கள் செய்ததை அடுத்து பொதுமக்கள் விஜய் ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.