'வலிமை' நாயகி நஸ்ரியாவா? அவரே அளித்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிக்கவிருக்கும் 60வது திரைப்படமான 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக இந்த படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை நஸ்ரியா பதிவு செய்த ஒரு டுவிட்டிலிருந்து அவர்தான் 'வலிமை' படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் பரவின.
இதனை அடுத்து நஸ்ரியா இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார். 'வலிமை' படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் உண்மை இல்லை. இன்னும் எதுவும் அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே தற்போதைய நிலையில் இந்த வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்
ஆனால் அதே நேரத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் படக்குழுவினர்களிடம் இருந்து வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளதால் ஒருசில நாட்களில் நஸ்ரியா இந்த படத்தில் நாயகியாக நடிப்பாரா? என்பது குறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Kindly Request To my friends its not officially confirmed that um to play a role in #Valimai its all just rumors.. So do please stay away from fake news.. Stay tuned for official confirmation from @SureshChandraa @DoneChannel1 @BoneyKapoor ????
— Nazriya Nazim (@Nazriya4U_) October 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com