நயன்தாரா ஒரு இரும்பு பெண்மணி: விக்னேஷ் சிவன் பெருமிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது கோலிவுட் திரையுலகினர் அனைவருக்கும் தெரிந்ததே. இதனை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் விருதை பெற்றுக்கொண்ட நயன்தாரா, 'இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த தந்தை, தாய் மற்றும் காதலர் ஆகிய அனைவருக்கும் நன்றி' என்று விக்னேஷ் சிவனை மறைமுகமாக தனது காதலர் என கூறினார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ், 'நயன்தாராவை ஒரு இரும்பு பெண்மணி என்று கூறி பெருமிதம் கொண்டார்
அவர் மேலும் கூறியதாவது: மற்ற எல்லா நடிகைகளையும் விட நயன்தாரா என்னுடைய ஃபேவரேட் நடிகை. அவர் ஒரு இரும்பு பெண்மணி. அதனால்தான் அவரை எனக்கு அதிகம் பிடிக்கும். நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன்' என்று கூறினார். நயன்தாரா , விக்னேஷ் சிவன் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிவருவது விரைவில் அவர்கள் தம்பதிகளாக மாறவுள்ளதை காட்டுவதாக கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments