close
Choose your channels

நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி பிலிம்.. நெட்பிளிக்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

Tuesday, October 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி படம் விரைவில் வெளியாக இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை பற்றிய டாக்குமெண்டரி வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இந்த வீடியோ இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், நயன்தாராவின் திருமண டாக்குமெண்டரி ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் ஒளிபரப்பாக இருப்பதாகவும், ’Nayanthara Beyond the Fairy Tale’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமென்டரி வீடியோ நெட்பிளிக்ஸில் வரும் தீபாவளி அன்று ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உட்பட பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட காட்சிகளை விரைவில் ரசிகர்கள் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment