அரை மணி நேரத்தில் கதையை ஓகே செய்த நயன்தாரா

  • IndiaGlitz, [Sunday,March 01 2020]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ’மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க கமிட்டானது குறித்து இயக்குனரும் இந்த படத்தின் நாயகனுமான ஆர்ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

இந்த படத்தின் கதையை கூறுவதற்காக தன்னை மாலை 5 மணிக்கு நயன்தாரா அழைத்ததாகவும், 7 மணிக்கு அவருடைய வீட்டிற்குச் சென்று கதையை கூறியதாகவும், 7.30 மணிக்கு அவர் இந்த கதைக்கு ஓகே கூறியதாகவும் ஒரு என கூறி உள்ளார். எனவே அரை மணி நேரத்தில் ஒரு கதையை ஓகே செய்து அதில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்ட படம்தான் ’மூக்குத்தி அம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.

’எல்கேஜி’ படம் அரசியல் நையாண்டி படம் போல் இந்த படம் பக்தியை நையாண்டி செய்யும் படம் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க சாமி படம் என்றும் நயன்தாரா இந்த படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் கதையுடன் ஒன்றி நடித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் நாகர்கோவில் அருகே சுற்றுலா சென்ற போது தற்செயலாக ’மூக்குத்தி அம்மன் கோயிலுக்குச் சென்றதாகவும் அந்த கோவில் குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது தான் தனக்கு இந்த படத்தின் கதை குறித்த ஐடியா வந்ததாகவும் ஆர்கே பாலாஜி கூறியுள்ளார் ஊர்வசி, மெளலி, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். தினேஷ்குமார் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாரா 48 நாட்கள் விரதமிருந்து உண்மையா? தயாரிப்பாளர் தகவல் 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் நடித்து முடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் தான் துணை முதல்வர்: பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் முதல்வர் என்றால் நான் தான் துணை முதல்வர் என்று பிரபல நடிகர் ஒருவர் சினிமா விழா ஒன்றில் பேசியது

35 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்கும் 'முதல் மரியாதை' நடிகர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் 'முதல் மரியாதை'. கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தீபன்

படுக்கைக்கு அழைத்த விவகாரம்: வரலட்சுமி அதிர்ச்சி தகவல்

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு நடிகை வரலட்சுமி பரபரப்பான பதில் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

விஜய் பெற்ற ஸ்பெஷல் முத்தம்: வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்