ஜெயலலிதா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா? மலையாள பத்திரிகை செய்தியால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக மக்கள் இதுவரை ஜெயலலிதாவை மட்டுமே 'தலைவி' என்று கூறி வந்தனர். அவருக்கு அடுத்து தற்போது நயன்தாராவை அவரது ரசிகர்கள் 'தலைவி' என்று கூற ஆரம்பித்துள்ளதாக மலையாள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான 'அறம்' திரைப்படம் நயன்தாராவை உச்சிக்கு கொண்டு போயுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும், ஊடக விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சமிபத்தில் 'அறம்' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு நயன்தாரா சென்றபோது 'எங்கள் தலைவி நயன்தாரா வாழ்க' என்று ரசிகர்கள் கோஷமிட்டதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியை தவிர வேறு யார் பயன்படுத்தினாலும் ரசிகர்கள் கொந்தளித்து போய்விடுவார்கள். சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அந்த பட்டத்தை பயன்படுத்தி பட்ட அவஸ்தையை அனைவரும் அறிவர். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் நயன்தாராவுக்கு பொருந்தும் என்பதை ரஜினி ரசிகர்களும் தற்போது ஏற்றுக்கொண்டனர்.
ஜெயலலிதாவை அடுத்து 'தலைவி' பட்டத்தை பெற்ற நயன்தாரா, அவருடைய இடத்தையும் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments