ஸ்டிரைக்கை மீறி ரிலீஸ் ஆகிறதா நயன்தாரா படம்?

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

இதுவரை இல்லாத வகையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே வேலைநிறுத்தத்தில் கடந்த ஒரு மாதமாக வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்பது முதல் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் வரை எந்தவொரு சினிமா சம்பந்தமான பணியும் இதுவரை நிறுத்தப்பட்டது இல்லை

ஆனால் ஒற்றுமையாக நடந்து வரும் இந்த வேலைநிறுத்தத்தை குலைக்க ஒருசிலர் சதி செய்துவருவதாக கூறப்படுகிறது. ஸ்டிரைக்கை மீறி ரிலீஸ் செய்யும் படங்களுக்கு அதிக சலுகை தருவதாக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் கியூப் நிறுவனம் ஆசை வார்த்தை காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மம்முட்டி, நயன்தாரா நடித்த மலையாள திரைப்படமான 'புதிய நியமம்' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'வாசுகி' திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆனால் இத்தனை நாள் வேலைநிறுத்தம் செய்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த படம் வெளியாகமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்த நயன்தாராவிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.

More News

பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு இன்று திருமணம்

கோலிவுட் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய முனிஷ்காந்த்துக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

வெற்றிடம் குறித்து அறிவியல்பூர்வ விளக்கம் அளித்த ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோ இல்லாத அரசு: கமல்ஹாசன் காட்டம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் பதவி பறிப்பு: ஐபிஎல்-க்கும் சிக்கல் வருமா?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல்ல உங்க துறையை கவனிங்க கமல்: தமிழிசை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தற்போது உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்க தயார் என கமல்