ஜோதிகாவை அடுத்து நயன்தாராவுக்கு கிடைக்கும் வாய்ப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

சமீபத்தில் வித்யாபாலன் நடித்த சூப்பர் ஹிட் பாலிவுட் திரைப்படமான 'துமாரி சூலு' என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஜோதிகாவை அடுத்து  நயன்தாராவும் பாலிவுட் பட ரீமேக் ஒன்றில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சமீபத்தில் வெளியான 'பரி' என்ற ஹாரர் இந்தி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ப்ரோசித் ராய் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை அனுஷ்காசர்மா நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அனுஷ்கா சர்மா நடித்த கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அந்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நயன்தாரா ஏற்கனவே 'மாயா', டோரா' ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாலிவுட்டுக்கு செல்கிறது பிக்பாஸ் ஜோடிகளின் திரைப்படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று முன்னேறி வருகின்றனர்.

சினேகனுடன் ஜோடி சேரும் ஓவியா! கட்டிப்பிடி வைத்தியம் இருக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல வருடங்கள் திரையுலகில் இருந்தவர்களுக்கு கிடைக்காத புகழ், ஓவியாவுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்க்கு கிடைத்த 'மெர்சலான' வெற்றி

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெற்றி பெற்ற போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வெற்றிப்படமாகிறது.

தோனி என்னும் தலைவன்: சிறப்பு தொடர்

தல தோனி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமின்றி பல நல்ல பண்புகளை கொண்டு அனைவரும் மதிக்கும் வகையில் நடந்து கொண்டவர்.

முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து எது தெரியுமா? கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளார்.