நயன்தாராவின் எக்ஸ் தள பக்கத்தில் அதிர்ச்சி புகைப்படம்.. ஹேக் செய்யப்பட்டதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கணக்கை தொடங்கினார் என்பதும் இதையடுத்து அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகள் குறித்த புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் திடீரென நயன்தாராவின் எக்ஸ் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி குறித்த விளம்பரங்கள் வந்த நிலையில் அவரது ஃபாலோயர்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
நயன்தாராவின் எக்ஸ் பக்கத்தில் இரண்டு கிரிப்டோ தொடர்பான பதிவுகள் செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அந்த பதிவுகள் நீக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து நயன்தாரா தனது எக்ஸ கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் தேவையில்லாத சில பதிவுகள் இருந்தால் அது குறித்து பொருட்படுத்த வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாரா மட்டும் இன்றி சிம்புவின் எக்ஸ் பக்கத்திலும் இதே போன்ற விளம்பரம் வந்துள்ளதாகவும் அவரது ஃபாலோயர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Account has been hacked. Please ignore any unnecessary or strange tweets being posted.
— Nayanthara✨ (@NayantharaU) September 13, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com