உலகின் மிகச்சிறந்த அன்னை: அன்னையர் தினத்தில் மகன்களுடன் நயன்தாரா.. !
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் அன்னையருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகர் நயன்தாரா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவின் கேப்ஷனாக அவர் ’அன்னையர் தினத்தை கொண்டாடும் உலகின் மிகச் சிறந்த அன்னை’ என்று பதிவு செய்துள்ளார். நயன்தாரா தனது மகன்களுடன் இருக்கும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஒரு சில மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.
அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகும் என்று தெரிந்தது. அதேபோல் இன்று அவர் பதிவு செய்துள்ள அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout