ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாண்டிச்சேரியில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. பாண்டிச்சேரி படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் இதனை அடுத்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம் அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
Thalaivi shooting in pondicherry#LadySuperstar #Nayanthara pic.twitter.com/zJ2p0NLabY
— Nayanthara Fans Club (NFKWA) (@NayantharaU_FC) August 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments