விக்னேஷ்சிவனுடன் இணைந்து விஸ்வரூப திட்டம் போடும் நயன்?

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

காதல் ஜோடியாக அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு பறந்துவரும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விக்னேஷ் சிவனை வைத்து நயன்தாரா பெரிய திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய ஹீரோக்களின் படங்களை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது விக்னேஷ் சிவனையே பெரிய ஹீரோவாக்க முடிவு செய்துள்ளாராம் நயன்.

சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ள நிலையில் அவரையே ஹீரோவாக்க நயன் முடிவு செய்திருப்பதாகவும், அந்த படத்தை அவரே தயாரித்து நாயகியாகவும் நடிக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நிஜக்காதலர்களை விரைவில் ரீல் காதலர்களாக திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.