திடீரென வாந்தி எடுத்த நயன்தாரா: மருத்துவமனையில் அனுமதி?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா திடீரென வாந்தி எடுத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நயன்தாரா சாப்பிட்ட சாப்பாடு ஒவ்வாமை காரணமாக திடீரென வாந்தி எடுத்ததாகவும் இதனை அடுத்து அவரது கணவர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரால் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இந்த வீடியோவின் கிளிம்ப்ஸ் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.
நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WikkiNayan The Magical Journey ????Beyond the fairy tale ??coming soon ?? pic.twitter.com/L4TilRoi22
— Nayanthara✨ (@NayantharaU) August 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments