close
Choose your channels

இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த நயன் - விக்கி தம்பதி.. என்ன பெயர் தெரியுமா?

Monday, April 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுடைய இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தனர் என்பதும் அதன் பிறகு மகாபலிபுரம் அருகே கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே. இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நயன் - விக்கி தம்பதியினர் இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்ததாக அறிவித்தனர் என்பதும் இந்த குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த இரட்டை குழந்தைகளுக்கு நயன் - விக்கி தம்பதியினர் பெயர் வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளன. Uyir Rudronil N Shivan மற்றும் Ulag Deivik N Shivan என நயன்தாராவின் இரட்டை ஆண் குழந்தைகளின் பெயர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment