விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் எப்போது?
- IndiaGlitz, [Saturday,May 04 2019]
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். காதலர் தினம் உள்பட ஒவ்வொரு முக்கிய தினங்களிலும் சமூக வலைத்தளங்களில் தங்கள் காதலை பகிர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இருவரும் தங்கள் காதலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆம், விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் வரும் நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் என்றும், அதனையடுத்து ஒருசில நாட்கள் இடைவெளியில் திருமணம் என்றும் செய்திகள் கசிந்து வருகிறது, நயன்தாரா தற்போது ரஜினியின் 'தர்பார்', சிரஞ்சீவியின் 'சைர நரசிம்மரெட்டி' உள்பட ஒருசில முக்கிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகளை நவம்பருக்குள் அவர் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண செய்தியை அறிந்ததும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.