குழந்தையை விட குரங்கு சேட்டை பண்றாங்களே நயன்தாரா.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,June 01 2024]

நடிகை நயன்தாரா தனது குடும்பத்தினருடன் ஹாங்காங் சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள், அதே போல் விக்னேஷ் சிவன் பதிவு செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக விக்னேஷ் சிவன், நேற்று ஹாங்காங் டிஸ்னிலேண்ட் பகுதியில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்ததை அடுத்து அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் நீர் வீழ்ச்சியின் முன் விக்னேஷ் எடுத்த புகைப்படம், நயன் மற்றும் விக்கி ஆளுக்கொரு குழந்தையுடன் விளையாடுவது, குழந்தை தரையில் உட்கார்ந்து விளையாடுவது உட்பட பல உள்ளன.

மேலும் இந்த புகைப்படங்களில் நயன்தாராவின் இரண்டு குழந்தைகளும் அமைதியாக இருக்கும் நிலையில் அவரை விட நயன்தாரா குரங்கு சேட்டை செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக விக்னேஷ் சிவனுக்கு அவர் கொடுக்கும் முத்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இந்த கியூட் புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில நிமிடங்களே ஆகி உள்ள நிலையில் சுமார் 2 லட்சம் லைக் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.