மும்பை ரெஸ்டாரெண்டில் நயன்தாரா.. செம ஸ்டைலிஷ் காஸ்ட்யூம்..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று மும்பையில் உள்ள புகழ் பெற்ற ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஷாருக்கான் ’ஜவான்’ உள்பட சில படங்களில் நடித்துவரும் நயன்தாரா நேற்று மும்பையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டார். அவர் மதிய உணவை முடித்துவிட்டு வெளியே வரும் போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

செம ஸ்டைலிஷ் ஜீன்ஸ் மற்றும் டாப் காஸ்ட்யூமில் நயன்தாராவும் கருப்பு உடையில் விக்னேஷ் சிவனும் உள்ள இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மும்பையில் ’ஜவான்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா சென்றாரா? அல்லது விக்னேஷ் சிவன் உடன் ஓய்வு நேரத்தை கழிக்க சென்றாரா என்பது தெரியவில்லை என்றாலும் ’ஜவான்’ படத்தின் படபிடித்தபோதும் மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் விஜய் சேதுபதி மற்றும் ஷாருக்கான் காட்சிகள் படமாக்கப்பட்ட வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நயன்தாரா குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான் ’அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் அவர் பேசுகிறார் என்றும் அவருடன் நடித்தது தனக்கு மிகப்பெரிய அனுபவம்’ என்றும் தெரிவித்திருந்தார்.