துபாயில் நயன்தாராவின் உயிர்கள்.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,September 14 2024]

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் தனது இரண்டு மகன்களின் புகைப்படத்தை பதிவு செய்து எனது உயிர்கள் என்று குறிப்பிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய இரண்டு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் விக்னேஷ் சிவன் சற்றுமுன் துபாய்க்கு குடும்பத்துடன் ஜாலி டூர் சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக அவர் துபாயில் எடுத்த தனது இரண்டு மகன்களின் புகைப்படத்தை பதிவு செய்து நயன்தாராவுக்கும் அதை டேக் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ‘எனது உயிர்கள்’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டார்கள் என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும் எங்கள் லேடி சூப்பர் ஸ்டார் எங்கே? என விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் விக்னேஷ் - நயன் தம்பதியின் இரண்டு குழந்தைகளும் க்யூட்டாக இருக்கிறார்கள் என்றும் பலரும் கண் வைத்து வருவதால் திருஷ்டி சுற்றி போடுங்கள் என்றும் கமெண்ட்களில் பதிவாகி வருகின்றன.

 

More News

20 வயது இளம்பெண் போல் நடிகை நதியா.. சுவிட்சர்லாந்து சுற்றுப்பயண சூப்பர் புகைப்படங்கள்..!

நடிகை நதியா தற்போது 57 வயதில் இருக்கும் நிலையில் அவர் 20 வயது இளம்பெண் போல் சுவிட்சர்லாந்து நாட்டில் துள்ளி குதித்து விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள

கணவருடன் பீச்சில் பிரியங்கா சோப்ரா.. கால் வைக்க வேறு இடமே இல்லையா? குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பீச்சில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தில் ஒன்றில்

ராகவா லாரன்ஸ் 25வது படம்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 25 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி அட்டகாசமான போஸ்டரும் வெளியாகிய நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்கிறேன்: லெஜண்ட் சரவணன் பேட்டி..!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் 2022 ஆம் ஆண்டு 'லெஜெண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அருள் சரவணன் நடிக்கும்

ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர்.. விஜய்யின் 'தளபதி 69' அறிவிப்பு.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..

ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் என்ற கேப்ஷனுடன் விஜய் நடிக்கும் 'தளபதி 69' படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.