close
Choose your channels

அடுத்தடுத்த மாதங்களில் நயன்தாராவின் 2 படங்கள் ரிலீஸ்? ரசிகர்கள் உற்சாகம்..!

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடித்து வரும் ’ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பே அதாவது ஆகஸ்ட் மாதம் நயன்தாராவின் இன்னொரு திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னரும் நடிகை நயன்தாரா திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார் என்பதும் அவர் ’ஜவான்’, ‘இறைவன்’, ‘ தி டெஸ்ட்’ உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நயன்தாரா நடித்து வரும் இன்னொரு திரைப்படம் 'இறைவன்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு ’இறைவன்’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் அதில் ரிலீஸ் தேதி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை ’என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment