அடுத்தடுத்த மாதங்களில் நயன்தாராவின் 2 படங்கள் ரிலீஸ்? ரசிகர்கள் உற்சாகம்..!

  • IndiaGlitz, [Wednesday,June 07 2023]

நயன்தாரா நடித்து வரும் ’ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பே அதாவது ஆகஸ்ட் மாதம் நயன்தாராவின் இன்னொரு திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னரும் நடிகை நயன்தாரா திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார் என்பதும் அவர் ’ஜவான்’, ‘இறைவன்’, ‘ தி டெஸ்ட்’ உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நயன்தாரா நடித்து வரும் இன்னொரு திரைப்படம் 'இறைவன்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு ’இறைவன்’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் அதில் ரிலீஸ் தேதி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை ’என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

திருமணம் எப்போ? ரசிகர்களின் கேள்விக்கு க்யூட்டா பதிலளித்த 'ஆதிபுருஷ்' நடிகர் பிரபாஸ்!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகராக இந்திய அளவில் பிரபலமாகி வரும் நடிகர் பிரபாஸிடம் ரசிகர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்

ஆணை திருத்தவே கல்யாணம்… சர்ச்சை கருத்தால் நெட்டிசன்களிடம் சிக்கிய பாலிவுட் நடிகர்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வரும் நடிகர் ஷாஹித் கபூர் திருமணம் குறித்து பேசியுள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்

10,12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.. இடம், தேதி அறிவிப்பு..!

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை தளபதி விஜய் நேரில் சந்தித்து பரிசுகளை அளிக்க

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முதல் மலையாள வெப் சீரிஸ்.. டிரைலரை ரிலீஸ் செய்த மோகன்லால்..!

'கேரளா கிரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பறயில் வீடு நீடித்தகரா'  என்ற மலையாள வெப்சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த வெப் சீரிஸ் டிரைலரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்

மலேசியாவில் இந்து கடவுள் அனுமனுக்கு பிரமாண்டமான கோவில்.. அழகிய புகைப்படங்கள்..!

இந்து கடவுளான அனுமனுக்கு தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல இடங்களில் கோவில் இருக்கும் நிலையில் தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அனுமன் கோயில் கட்டப்பட்டுள்ளது அந்நாட்டு பக்தர்களுக்கு மிகப்பெரிய