வனிதா டுவிட்டரை விட்டு வெளியேற நயன்தாரா டுவீட் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையாகி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது என்பது தெரிந்ததே. வனிதா விஜயகுமார் திருமணத்தை ஒருசில பிரபலங்கள் விமர்சனம் செய்ய, அவர்களுக்கு வனிதா பதிலடி கொடுத்து வெளியான வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நேற்று வனிதா திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறினார். கடந்த சில நாட்களாக டுவிட்டர் மூலம் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுடன் மோதிக் கொண்டிருந்த வனிதா, திடீரென டுவிட்டரில் இருந்து வெளியேறியதற்கு நயன்தாரா குறித்த ஒரு டுவீட் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது
வனிதா திருமணம் குறித்து சமீபத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்த லட்சுமி ராமகிருஷ்ணன் எல்லோரும் எலிசபெத் ஹெலனுக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்பது குறித்த ஒரு ஹேஷ்டேக்கை பதிவு செய்தார். இந்த ஹேஷ்டேக் குறித்து கருத்து கூறிய ஒரு டுவிட்டர் பயனாளி, ’இதற்கு முன்னர் நயன்தாரா, பிரபுதேவாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருந்தபோதிலும் நயன்தாரா அவருடன் ரெலேஷன்ஷிப்பில் இருந்ததை ஏன் யாருமே கேள்வி கேட்க வில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்
இந்த டுவிட்டை தனக்கு ஆதரவாக எடுத்து கொண்ட வனிதா, ‘இதற்கு பதில் சொல்லுங்கள்’ என லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்திருந்தார். மேலும் இந்த விஷயத்தில் என்னை குற்றஞ்சாட்டியவர்கள் நயனை ஏன் எதுவுமே சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடி கொடுத்த நயன்தாரா ரசிகர்கள், ‘ நயன்தாராவுடன் பிரபுதேவா ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரே நயன்தாராவை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், விவகாரத்துக்கு அவர் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், உங்களை போல் அவர் விவாகரத்து பெறுவதற்கு முன்னரே திருமணம் செய்யவில்லை என்றும் பதிலடி கொடுத்னர். மேலும் பிரபுதேவா தனது சொந்த வாழ்க்கை குறித்தும் ரிலேஷன்ஷிப் குறித்து தானே வீடியோ வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை என்றும் பதிலடி கொடுத்தனர்.
நயன்தாரா ரசிகர்களின் இந்த பதிலடியால் தனக்கு எதிராக டிவிட்டரில் ஒரு பெரும் கூட்டம் கூடி விட்டதை அறிந்து வனிதா டுவிட்டரில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com