விஜய்க்காக கொள்கையை விட்டுக்கொடுத்த நயன்தாரா!

  • IndiaGlitz, [Monday,September 16 2019]

கோலிவுட் திரையுலகில் நடிகர்களில் அஜித்தும், நடிகைகளில் நயன்தாராவும் மட்டுமே தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் விழாக்களுக்கு வருவதில்லை என்ற கொள்கையைக் கொண்டு உள்ளனர் இருவரும் படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே தாங்கள் புரமோஷன் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை கூறிவிடுவர். இதற்கு ஒப்புக்கொண்டே தயாரிப்பாளர்கள் அஜித்தையும் நயன்தாராவையும் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களான 'அறம்', 'மாயா', கோலமாவு கோகிலா' போன்ற படங்களில் நடித்தபோதும் நயன்தாரா அந்த படங்களின் புரமோஷனுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய்காக தனது புரோமோஷன் கொள்கையை தகர்த்துவிட்டு இந்த விழாவில் அவர் கலந்து கொள்ள இருப்பதால் இந்த நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

அஜித் பட வசனம் இன்னும் ரசிகர்களுக்கு புரியவில்லை: நடிகை டாப்சி

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் அஜித் பேசும் வசனங்களில் ஒன்றான 'நோ மீன்ஸ் நோ'

மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால்.. கமல்ஹாசன் எச்சரிக்கை

ஒரே நாடு ஒரே மொழி என்ற கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இந்தியா முழுவதிலும் இந்தியை பரப்ப வேண்டும் என்று கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா? வைரமுத்து கேள்வி

சூரியனால் கூட ஒட்டுமொத்த உலகிற்கு ஒரே நேரத்தில் பகலை கொடுக்க முடியாதபோது இந்தியால் மட்டும் எப்படி ஒரே இந்தியாவிற்கு ஒரே மொழியாக இருக்க முடியும் என்ற கேள்வியை கவியரசு வைரமுத்து எழுப்பியுள்ளார்.

தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்து: மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஜாதி பாகுபாடு குறித்து பேசிய நிலையில் அடுத்து அவர் இயக்கவுள்ள தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கவின் - லாஸ்லியா காதலை விட சுபஸ்ரீ மரணம் முக்கியம்: தமிழ் நடிகர் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதல் குறித்தே பலர் விவாதம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி, அதில் நடப்பவற்றை பேசுவதைவிட, சுபஸ்ரீ என்ற உயிர் பேனரால் இழக்கப்பட்டுள்ளது