ஷாருக்கான் ஜோடியாக நடிக்கின்றாரா நயன்தாரா? ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் பாலிவுட் திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் இயக்குனர் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பதும், இந்த திரைப்படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்திலும் அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பதால், ஷாருக்கான் ஜோடியாக அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments