வெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா?

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ’நெற்றிக்கண்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும், மலையாளத்தில் ’நிழல்கள்’ மற்றும் ’பாட்டு’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மோகன்லாலின் ’லூசிபர்’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்க நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது

சமீபத்தில் சிரஞ்சீவியுடன் ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்த நயன்தாரா மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மோகன் ராஜாவின் இயக்கத்தில் ’தனி ஒருவன்’ மற்றும் ’வேலைக்காரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த நயன்தாரா மூன்றாவது முறையாக இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லூசிபர் திரைப்படத்தில் மஞ்சு வாரியரின் கேரக்டர் மோகன்லாலின் தங்கை கேரக்டராக வரும் என்பதால், சிரஞ்சீவிக்கு தங்கையாக தான் நயன்தாரா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த கேரக்டருக்கு ஏற்கனவே சுகாசினி, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, நதியா உள்பட பலர் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் நயன்தாரா தான் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

அப்செட்டா இருந்துச்சு, கஷ்டமா இருந்துச்சு: கமல்ஹாசனிடம் புலம்பிய ரம்யா, ரியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் நாளையும் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நாளை கிளைமாக்ஸில் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும். இந்த நிலையில் இன்று ஒரு ட்விஸ்ட் இருக்கிறது

பட ரிலீசுக்கு முன்பே புற்றுநோயால் உயிரிழந்த அறிமுக ஹீரோ… படக்குழுவினர் இரங்கல்!!!

இயக்குநர் சாலோமோன் கண்ணன் இயக்கி வந்த “திருமாயி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கை பார்க்க போகிறார் ரியோ: பிரபலத்தின் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது கருத்தையும் விமர்சனத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் பதிவு செய்த ஃபேஸ்புக்

வெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளரின் தங்கை!

தமிழில் பல டாப் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் பெரியடப்படாத படம் ஒன்றில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இன்னும் ஒரு திருப்பம் பாக்கியிருக்கிறது: கமல் வைத்த டுவிஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 104 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றும் நாளையும் இறுதிப்போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளன. இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 6 பேர்களில் ரூபாய் 5 லட்சம் பெற்று