'நன்றியும் காதலும்': நயன்தாரா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ’கனெக்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து ’கனெக்ட்’ திரைப்படத்திர்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு எனக்கு மிகவும் நிறைவான ஆண்டாக அமைந்து உள்ளது. இதனால் நான் இறைவனுக்கு நன்றியுடன் நிரம்பி இருக்கின்றேன். நான் நடித்த ’கனெக்ட்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மீண்டும் மீண்டும் இந்தப் படத்தை முன்பதிவு செய்து பார்ப்பவர்களுக்கு எனது நன்றி.
’கனெக்ட்’ படத்தின் கதை தனித்துவமானது. பார்வையாளர்களை நிச்சயம் பூர்த்தி செய்யும் வகையில் நாங்கள் முயற்சி செய்துள்ளோம். மக்களின் தேவையை மனதில் கொண்டு முழு நம்பிக்கையுடன் இந்த படத்திற்காக நாங்கள் பணியாற்றியுள்ளோம்.
என்னை நம்பி இந்த படத்தில் இவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்த இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு எனது நன்றி. அவரது இயக்கம் உலகத்தரம் வாய்ந்தது. அவருடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை.
எனது தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனுக்கும் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது காதலுடன் கூடிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தான் இந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று உள்ளீர்கள். இந்த படத்தை சிறந்த முறையில் தயாரித்து விநியோகம் செய்து ரிலீஸ் வரை கொண்டு சென்றதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments