பாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அறிக்கை ஒன்றின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தெய்வீகக்‌ குரல்‌ இனி இல்லை என்பதை நினைக்கும்‌ போதே நெஞ்சம்‌ பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்பி பாலசுப்ரமணியம்‌ சாருடைய குரல்‌, நம்முடைய எல்லா காலங்களுக்கும்‌, காரணங்களும்‌ பொருந்தி இருக்கும்‌.

நீங்கள்‌ இனி இல்லை என்பதை மனம்‌ நம்ப மறுக்கிறது... ஆயினும்‌ உங்கள்‌ குரல்‌ என்றென்றும்‌ நீங்கா புகழுடன்‌ இருக்கும்‌. உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ இந்த நேரத்தில்‌ கூட உங்கள்‌ பாடல்‌ மட்டுமே பொருந்துகிறது. எங்கள்‌ வாழ்வில்‌ உங்களின்‌ ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல்‌ உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம்‌ இல்லாமல்‌ பிரியா விடை கொடுக்கிறோம்‌. பாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்‌. உங்களை பிரிந்து வாடும்‌ உங்கள்‌ குடும்பத்தாருக்கும்‌, நண்பர்களுக்கும்‌, உங்கள்‌ திரை உலக சகாக்களுக்கும்‌, உலகெங்கும்‌ பரவி இருக்கும்‌ உங்கள்‌ எண்ணற்ற ரசிகர்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த ஆறுதல்‌ செய்தி இது...

இவ்வாறு நடிகை நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

எஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் மரணமடைந்த நிலையில் அவருடைய மறைவிற்கு இந்திய குடியரசு தலைவர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர் 

39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்!!!

கம்போடியா நாட்டில் எல்லைப் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகளவில் கன்னிவெடிகள் பதிக்கப்

குடும்பத் தலைவி என்றால் சும்மாவா??? மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு!!!

சாலை விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் இறப்புக்கு நஷ்ட ஈடு கேட்ட வழக்கு ஒன்றில் மகாராஷ்டிரா நீதிமன்றம்

கொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை!!! கொடூரச் சம்பவம்!!!

பெங்களூரு அடுத்த ஸ்ரீநகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த முதியவரின்

ATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்!!!

கொரோனா தாக்கத்தால் வறுமையில் வாடிய நபர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்த இளைஞர்