ராதாரவி விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

நடிகர் ராதாரவி சமீபத்தில் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் தெலுங்கில் சீதையாக நடிக்கும் நயன்தாரா, தமிழில் பல்வேறு கேரக்டரில் நடித்து வருவதாகவும், அவர் ஒரு திறமையான நடிகைதான் என்று பேசியதாகவும், தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவவும், தனது பேச்சு நயன்தாராவை அவரை திருமணம் செய்பவரையும் பாதித்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இதுவரை அமைதி காத்த நடிகை நயன்தாரா தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலில் தனது அறிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்ட நயன்தாரா, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் கொடுக்கும் புகார் பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்றும், அந்த வகையில் தம்மைப் பற்றி நடிகர் ராதாரவி பேசியது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்துமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தை தான் கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்கு வேண்டும் என்றும், ஆனால் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைவதாகவும் கூறிய நயன்தாரா, திரைப்பட விழாவில் நடிகர் ராதாரவி பேசியபோது சிலர் கைதட்டி ரசித்து சிரித்து மகிழ்ந்ததாகவும், இதுபோன்ற ரசிகர்கள் உள்ளவரை ராதாரவி போன்றோர் தரக்குறைவாக பேசுவது நீடிக்கும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துவதாகவும் இருப்பினும் கடவுள் அருளால் மீண்டும் தனது பணியை தொடங்கவிருப்பதாகவும் நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


More News

ஸ்டாலின், கனிமொழிக்கு நன்றி கூறிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சை முதலில் திரையுலகினர் உள்பட யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இதுகுறித்து பதிவு செய்த டுவிட்டுக்களால்தான்

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி!

விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

திமுகவிற்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்

ராதாரவிக்கு நாசர் எழுதிய காட்டமான கடிதம்!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஸ்டாலினை அடுத்து ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி!

நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி கூறிய அநாகரீகமான கருத்துக்கு அனைத்து தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்