ராதாரவி விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ராதாரவி சமீபத்தில் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் தெலுங்கில் சீதையாக நடிக்கும் நயன்தாரா, தமிழில் பல்வேறு கேரக்டரில் நடித்து வருவதாகவும், அவர் ஒரு திறமையான நடிகைதான் என்று பேசியதாகவும், தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவவும், தனது பேச்சு நயன்தாராவை அவரை திருமணம் செய்பவரையும் பாதித்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இதுவரை அமைதி காத்த நடிகை நயன்தாரா தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலில் தனது அறிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்ட நயன்தாரா, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் கொடுக்கும் புகார் பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்றும், அந்த வகையில் தம்மைப் பற்றி நடிகர் ராதாரவி பேசியது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்துமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தை தான் கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்கு வேண்டும் என்றும், ஆனால் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைவதாகவும் கூறிய நயன்தாரா, திரைப்பட விழாவில் நடிகர் ராதாரவி பேசியபோது சிலர் கைதட்டி ரசித்து சிரித்து மகிழ்ந்ததாகவும், இதுபோன்ற ரசிகர்கள் உள்ளவரை ராதாரவி போன்றோர் தரக்குறைவாக பேசுவது நீடிக்கும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துவதாகவும் இருப்பினும் கடவுள் அருளால் மீண்டும் தனது பணியை தொடங்கவிருப்பதாகவும் நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com